தேடியந்திரமான கூகுள் உள்ளுர் தொடர்பான தகவல்களை உள்ளூர்வாசிகளிடமிருந்து பெற உதவும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ‘நெய்பர்லி’ எனும் பெயரில் இந்தச் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் பயனாளிகள் தங்கள் சுற்றுப்புறம் சார்ந்த கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதிலை சக உறுப்பினர்கள் மூலம் பெறலாம். முதல் கட்டமாக மும்பை நகரில் முன்னோட்ட அடிப்படையில் இந்தச் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மற்ற இந்திய நகரங்களுக்கு இந்த செயலி விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. தகவல் தேவைப்படுபவர்கள் இந்தச் செயலி மூலம் கேள்வி எழுப்பலாம். உதவி செய்ய விரும்புகிறவர்கள் அதற்கு பதில் அளிக்கலாம்.