கேள்வி - பதில் சேவையை வழங்கும் ‘குவோரா’ இணையதளம், இந்தி மொழியிலும் சேவையைத் தொடங்கியுள்ளது. ஃபேஸ்புக்கில் பணியாற்றிய ஆடம் டிஆஞ்சலோவால் 2009-ல் குவோரா இணையதளம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் அதிக பயனாளிகள் இருப்பதால் இங்கு மேலும் வளர்ச்சியை குறி வைத்து இந்தி மொழி சேவையை அறிமுகம் செய்துள்ளது. மேலும் பல இந்திய மொழிகளில் சேவையை அறிமுகம் செய்யவும் குவோரா திட்டமிட்டுள்ளது. அடுத்த அறிமுகம் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளிலும் இருக்கலாம் என ‘குவோரா’ தெரிவித்துள்ளது.