யூடியூப் வீடியோக்களை பார்த்துக்கொண்டே நண்பர்களுடன் உரையாடும் வசதி அறிமுகமாகியுள்ளது. ஏற்கெனவே மொபைல் பயனாளிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி, இப்போது டெஸ்க்டாப்பிலும் அறிமுகம் ஆகியுள்ளது. வலப்பக்கத்தில் உள்ள அரட்டை ஐகானில் இதற்கான மெசேஜிங் வசதியை கம்ப்யூட்டரில் அணுகலாம். அதன் பிறகு வீடியோ தொடர்பாக நண்பர்களுடன் உரையாடலாம். இடப்பக்கம் கீழே, அரட்டை வரலாறு தோன்றும். அதில் உரையாடலைத் தொடரலாம். இந்த உரையாடலை தனிப்பட்டதாகவும் வைத்துக்கொள்ளலாம். குழு உரையாடலாகவும் மேற்கொள்ளலாம்.