தொழில்நுட்பம்

தளம் புதிது: கூகுள் காட்டும் நாவல் வழி

சைபர் சிம்மன்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட புதுமையான இணையதளமாக ‘நாவல்ஸ் ஆன் லொகேஷன்’ இணையதளம் அமைந்துள்ளது. இந்தத் தளம் புதிய நாவல்களைக் கண்டறிய உதவுகிறது. நாவல்களை அவற்றின் கதைக்களம் சார்ந்து அடையாளம் காண இந்தத் தளம் உதவுகிறது.

கூகுள் வரைபடத்தின் மீது இந்த விவரம் மிக அழகாக அளிக்கப்படுகிறது. இந்தத் தளத்தில் நுழைந்ததுமே, கூகுள் வரைபடத்தின் மீது இறகு பேனாக்களைப் பார்க்கலாம். ஒவ்வொரு பேனாவும் குறிப்பிட்ட அந்த இடத்தை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நாவல்கள் பற்றிய தகவல்களை அளிக்கிறது. வாசகர்கள் தங்களுக்குப் பிடித்தமான இடத்தைக் குறிக்கும் இறகு பேனாவை ‘கிளிக்’ செய்து தொடர்பான நாவல்களை அறியலாம். குறிப்பிட்ட நாவல்களில் வரும் மற்ற இடங்களையும் தேடிப் பார்க்கலாம்.

இணைய முகவரி:http://novelsonlocation.com/

SCROLL FOR NEXT