தொழில்நுட்பம்

தளம் புதிது: கூட்டம் கூட்டும் இணையம்

சைபர் சிம்மன்

லுவலகம் என்றாலே அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களும் குழு சந்திப்புகளும் நடைபெறுவது வாடிக்கை. அலுவலக ஆலோசனைக் கூட்டங்கள் பயனுள்ளதாக அமையலாம் அல்லது ஆளைவிடுங்கள் எனச் சொல்லும் வகையில் அலுப்பும் ஊட்டலாம். அதற்காக ஆலோசனைக் கூட்டங்களை அலட்சியம் செய்துவிடவும் முடியாது.

அலுவலக, வர்த்தகச் சூழலில் சிறந்த முடிவு எடுக்கக் குழு ஆலோசனை அவசியம். இந்த ஆலோசனைகளை எப்படித் திறம்பட மேற்கொள்வது என்பது ஒரு கேள்வி என்றால், எப்போது ஆலோசனைக் கூட்டத்தை நாட வேண்டும் என்பது இன்னொரு முக்கிய கேள்வி. சில நேரம் குழு விவாதத்திலேயே நேரம் வீணாகலாம். இத்தகைய அனுபவம் உள்ளவர்களுக்கு, இப்போது குழு ஆலோசனைக் கூட்டம் அவசியமா எனும் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் ‘ஷுட் இட் பி ஏ மீட்டிங்’ இணையதளம் அமைந்துள்ளது.

இந்தத் தளத்தில் கேட்கப்படும் எளிய கேள்விகளுக்குப் பதில் அளித்தால், இப்போது ஆலோசனை அவசியமா, அதைவிட எளிதாக முடிவெடுக்கலாமா எனத் தீர்மானிக்கலாம்.

இணைய முகவரி: https://shoulditbeameeting.com/

SCROLL FOR NEXT