ந
கரங்களின் பழைய ஒளிப்படங்களைப் பார்த்து ரசிப்பது சுவாரசியமான அனுபவமே. இந்தப் படங்களின் மூலம், அந்தக் காலத்தில் நகரின் தோற்றத்தைத் தெரிந்துகொள்ள முடிவதோடு, கால ஓட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் தெளிவாக உணரலாம். இந்தக் காட்சிகளைக் காணொலி வடிவில் பார்க்க முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா? அமெரிக்காவின் நியூயார்க் நகரைப் பொறுத்தவரை இந்த அனுபவத்தைப் பெறலாம்.
ஒரு நூற்றாண்டுக்கு முன் நியூயார்க் நகரம் எப்படி இருந்தது என்பதை உணர்த்தும் காணொலிக் காட்சிகளை அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்கிரஸ், யூடியூப்பில் பதிவேற்றியுள்ளது. நியூயார்க் நகரில் முதல்முறையாக நடைபெற்ற கார்களின் அணிவகுப்பு உள்ளிட்ட அரிய வீடியோக்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
யூடியூப்பைக் காண: https://bit.ly/2GHX2K4