தொழில்நுட்பம்

செயலி புதிது: மோகம் குறைக்கும் செயலி

சைபர் சிம்மன்

ஸ்

மார்ட்போன் பயன்பாட்டில் இருக்கும் கவனச் சிதறல்களைக் குறைக்க உதவும் வகையில் சியம்போ எனும் புதிய செயலி அறிமுகம் ஆகியுள்ளது. போனுக்கான லாஞ்சர் போல செயல்படும் இந்தச் செயலி, பயனாளிகளுக்குக் கூடுதல் கட்டுப்பாட்டை அளிக்கிறது. வழக்கமாக வண்ணமயமான திரைக்குப் பதிலாக, கறுப்பு வெள்ளைத் திரையை இந்த லாஞ்சர் அளிக்கிறது. பளிச் ஐகான்களையும் இதில் பார்க்க முடியாது. ஏதேனும் சேவை தேவையெனில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். கவனச் சிதறல்களைக் குறைக்கும் நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐபோன்களுக்கான வடிவில் இது அறிமுகம் ஆகியுள்ளது.

தகவல்களுக்கு: http://www.getsiempo.com/

SCROLL FOR NEXT