இ
ணையத்தில் பல விதமான ‘ஜிஃப்’களைப் பார்த்து ரசித்திருக்கலாம். ‘ஜிஃப்’கள் பெரும்பாலும் நகைச்சுவை பாணியிலேயே அமைந்திருக்கின்றன. எனினும், அர்த்தமுள்ள ‘ஜிஃப்’களும் அநேகம் உண்டு. அந்த வகையில் சரித்திர நினைவுச் சின்னங்கள் நவீன அனிமேஷன் வடிவங்களாகத் தோன்றும் புதுமையான ‘ஜிஃப்’களை எக்ஸ்பீடியா நிறுவனம் நியோநாம், திஸ் ஈஸ் ரெண்டர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
எகிப்தின் லக்சர் ஆலயம், ஏதென்ஸ் புகழ் பார்த்தெனான் உள்ளிட்ட பழங்கால நினைவுச் சின்னங்களை இப்படி அழகிய ‘ஜிஃப்’ வடிவமாக உருவாக்கியுள்ளனர். கலைப் பொக்கிஷங்களாகத் திகழ்ந்த இந்தச் சரித்திரச் சின்னங்கள் இப்போது அவற்றின் முழு வடிவில் இல்லை என்றாலும், அவற்றின் மூல வடிவம் எத்தனை மகத்தானதாக இருந்திருக்கும் என்பதை இந்த ஜிஃப்களில் பார்க்கலாம்.
தகவல்களுக்கு: https://mymodernmet.com/10-types-of-architecture/