CMF போன் 1 
தொழில்நுட்பம்

நத்திங் நிறுவன ‘CMF போன் 1’ இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நத்திங் நிறுவனத்தின் ‘CMF போன் 1’ அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ம் ஆண்டின் ஜூலை மாதம் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei). இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-இல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார். இதுவரை நத்திங் போன் (1), நத்திங் போன் (2), நத்திங் போன் (2a) ஆகிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த சூழலில் மலிவு விலையிலான போனை சந்தையில் அறிமுகம் செய்யும் நோக்கில் ‘CMF’ என்ற துணை நிறுவனத்தை நத்திங் தொடங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் CMF போன் 1 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதோடு சேர்த்து பட்ஸ் புரோ 2 மற்றும் வாட்ச் புரோ 2 போன்ற சாதனங்களும் அறிமுகம் ஆகியுள்ளன. CMF போன் 1 - சிறப்பு அம்சங்கள்:

  • 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • இரண்டு ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட்
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7300 5ஜி சிப்செட்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள பிரதான கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 6ஜிபி / 8ஜிபி ரேம்
  • 128ஜிபி ஸ்டோரேஜ்
  • 5,000mAh பேட்டரி
  • 33 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் இதனுடன் வழங்கப்படுகிறது
  • 5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் உண்டு
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இந்த போனின் பேக் கவரை ரீப்ளேஸ் செய்து கொள்ளலாம்
  • மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது
  • இதன் விலை ரூ.15,999 முதல் தொடங்குகிறது
SCROLL FOR NEXT