தொழில்நுட்பம்

தகவல் புதிது: கூகுள் அளிக்கும் புதிய முகவரி

சைபர் சிம்மன்

தே

டியந்திர நிறுவனமான கூகுள் தன்வசம் உள்ள ‘டாட் ஆப்’ (.app) எனும் முகவரியை மற்றவர்கள் பதிவுக்காகத் திறந்துவிட்டுள்ளது. இணைய உலகில் டாட்.காம் உள்ளிட்ட டொமைன் முகவரிகள் பிரபலமாக உள்ளன. இந்த வரிசையில் புதிய டொமைன் முகவரிகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் டாட்.ஆப் எனும் முகவரியை கூகுள் வாங்கியது.

தற்போது இந்த டொமைனுடன் முடியும் புதிய முகவரிகளை மற்றவர்களுக்கு கூகுள் திறந்துவிட்டுள்ளது. செயலிகளை உருவாக்குபவர்கள் தங்கள் செயலிகளுக்கான இருப்பிடமாக உள்ள இணையதளங்களை இந்த முகவரியுடன் அமைத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே பல செயலி உருவாக்குநர்கள் இந்த முகவரியில் தங்களுக்கான தளங்களைப் பதிவு செய்யத்தொடங்கியுள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு; https://get.app/

SCROLL FOR NEXT