தொழில்நுட்பம்

ஜெப்ரானிக்ஸின் ரெட்ரோ பூம் பாக்ஸ் ஸ்பீக்கர் ஆக்ஸல்

கார்த்திக் கிருஷ்ணா

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் 'ஆக்ஸல்' (Axel) என்ற புதிய சிறிய ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. ரெட்ரோ பூம்பாக்ஸ் வடிவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கையடக்கமான இந்த ஸ்பீக்கரில் ஒலி கட்டுப்பாடு, மீடியா கட்டுப்பாடு, வானொலி மற்றும் ஈக்வலைசர் முதலியற்றுக்கு மேற்பகுதியில் கட்டுப்பாட்டு பொத்தான்கள் உள்ளன. ப்ளூடூத் மூலம் இணைத்து மொபைல் அழைப்புகளையும் கேட்டுக் கொள்ளலாம். மேலும் இதில் USB/ மைக்ரோ SD கார்டுகளைச் செருகியும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது AUX ஆதரவு அல்லது உள்ளமைக்கப்பட்ட FM வானொலி கேட்கும் வசதியும் கொண்டிருக்கிறது.

வசதியான ஹேண்டில் பார் இருப்பதால், கைக்கு அடக்கமாக எங்கு வேண்டுமானாலும் இதை எடுத்துச் செல்லலாம். வீட்டிலோ, திறந்த வெளியிலோ, எங்கு வைத்துக் கேட்டாலும் சிறப்பான ஒலித் தரத்தைத் தரும் என ஜெப்ரானிக்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த வயர்லெஸ் சிறிய ஸ்பீக்கர் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும். இதன் விலை ரூ. 2,799

SCROLL FOR NEXT