iQOO Z9X 5ஜி போன் 
தொழில்நுட்பம்

iQOO Z9X 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z9X 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. அந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். பட்ஜெட் விலையில் மூன்று வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO Z9X 5ஜி ஸ்மார்ட்போனை இப்போது அந்த நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் iQOO Z9 5ஜி போனை அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.72 இன்ச் ஃபுள் ஹெச்டி+ டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • ஆக்டா-கோர் 4nm ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் 1 சிப்செட்
  • 50 மெகாபிக்சல் கொண்ட பின்பக்க பிரதான கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
  • 4ஜிபி, 6ஜிபி மற்றும் 8ஜிபி மூன்று விதமான ரேம்களில் இந்த போன் கிடைக்கிறது
  • 128ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்டுள்ளது
  • டைப்-சி யுஎஸ்பி
  • 6,000mAh பேட்டரி
  • 44 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
  • இந்த போனின் ஆரம்ப விலை ரூ.12,999
  • வரும் 21-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. விலையில் குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது
SCROLL FOR NEXT