தொழில்நுட்பம்

ஒரு மாத குழந்தையை அடித்துக் காயப்படுத்திய தந்தை: ஃபேஸ்புக்கில் படத்தைப் பகிர்ந்துக்கொண்ட கொடூரம்

செய்திப்பிரிவு

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது ஒரு மாத குழந்தையை அடித்தது மட்டுமின்றி, அந்தக் காயங்களைப் படம் எடுத்து ஃபேஸ்புக்கில் விளையாட்டாகப் பதிவு செய்தார். தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருப்பதைச் சகித்துக்கொள்ள முடியாமல் அடித்ததாகவும், ஃபேஸ்புக்கில் அப்படத்தை விளையாட்டாக தான் பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

சமூக வலைதளத்தில் அப்படத்தைக் கண்ட ஒரு ஃபேஸ்புக் நண்பர், இந்த விநோதமான செயலை பற்றிக் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

இதனால், அக்குழந்தையின் பெற்றோர் மீது வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அக்குழந்தையின் தாய் காவல்துறையினரிடம் தெரிவிக்காததன் காரணம், தனது கணவர் தன்னைவிட்டு சென்று விடுவார் என்ற பயமே என்று விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT