ரெட்மி நோட் 13 புரோ+ வேர்ல்ட் சாம்பியன்ஸ் எடிஷன் 
தொழில்நுட்பம்

ரெட்மி நோட் 13 புரோ+ வேர்ல்ட் சாம்பியன்ஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 13 புரோ+ வேர்ல்ட் சாம்பியன்ஸ் எடிஷன் அறிமுகமாகி உள்ளது. கால்பந்து ரசிகர்களுக்கென தனித்துவ டிசைன் மற்றும் அம்சங்களை உள்ளடக்கி இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்துடன் கைகோர்த்துள்ளது ரெட்மி.

சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகமான பத்தாவது ஆண்டினை குறிப்பிடும் வகையில் ‘10’-ம் எண் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல பின்பக்கத்தில் வெள்ளை மற்றும் வெளிர் நீலம் என ட்யூயல் டோன் கொடுக்கப்பட்டுள்ளது. இது அர்ஜெண்டினா அணியின் ஜெர்ஸியை பிரதிபலிக்கிறது.

இதோடு 1978, 1986 மற்றும் 2022 என மூன்று உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றதை குறிப்பிடும் வகையிலான வாசகம் இந்த போனின் பாக்ஸில் இடம்பெற்றுள்ளது. அதில் மூன்று அர்ஜெண்டினா அணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நீல நிறத்தில் சார்ஜிங் கேபிள் மற்றும் அர்ஜெண்டினா அணியின் லோகோ அடாப்டரில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர கஸ்டமைஸ் செய்யப்பட்ட வால்பேப்பர் மற்றும் ஸ்பெஷல் ஐகான் போன்றவற்றையும் பயனர்கள் பயன்படுத்த முடியும்.

சிறப்பு அம்சங்கள்

  • 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7200 அல்ட்ரா சிப்செட்
  • 12ஜிபி ரேம்
  • 513ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • வரும் மே 15-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை விற்பனை இந்தியாவில் தொடங்குகிறது
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 200 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • டைப்-சி யுஎஸ்பி
  • 5,000mAh பேட்டரி
  • 5ஜி நெட்வொர்க்
  • இந்த போனின் விலை ரூ.37,999. விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
SCROLL FOR NEXT