சின்ன ஐடியாக்கள் முதல் பெரிய எண்ணங்கள்வரை எல்லாவிதமான விஷயங்களையும் குறிப்பெடுக்க உதவும் கெட்ஜாட் செயலி அறிமுகமாகியுள்ளது. ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி ஐடியாக்களைக் குறித்து வைக்க உதவுவதோடு, நினைவூட்டல்களைப் பதிவுசெய்யவும் வழி செய்கிறது. செய்ய வேண்டிய செயல்களின் பட்டியலையும் குறித்து வைக்கலாம். பழைய செயல்களையும் எளிதாகத் தேடலாம். கவனச்சிதறல் இல்லாமல் குறிப்புகளை எழுதலாம். மேலும் விவரங்களுக்கு: ttps://gogetjot.com/