ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு இலக்கணம் முதல் பேச்சு மொழி பயிற்சிவரை பலவற்றைக் கற்றுத்தர உதவும் இணைய தளங்கள் பல இருக்கின்றன. அந்த வரிசையில் மிக எளிமையான இணைய தளமாக அறிமுகமாகியுள்ளது டூபீபிள் சே. இந்தத் தளத்தில் ஆங்கில மொழிப் பயன்பாடு தொடர்பான பாடங்களோ பயிற்சியோ கிடையாது. ஒரே ஒரு தேடல் கட்டம் மட்டுமே இருக்கிறது. அதில் ஆங்கில மொழி சொல் அல்லது சொற்றொடரை டைப் செய்து அவற்றின் பயன்பாட்டைப் பார்க்கலாம். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அந்தச் சொல் அல்லது சொற்றொடரை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு தேடலுக்கும் பொருத்தமான வாக்கியங்கள் தேடலின் முடிவில் பட்டியலிடப்படுகின்றன.
இணையதள முகவரி: https://dopeoplesay.com/