தொழில்நுட்பம்

பொருள் புதிது: பனிப்பிரதேச ஆடை

செய்திப்பிரிவு

பனிப்பிரதேசம் மற்றும் குளிர்காலங்களில் உடல் வெப்ப நிலையை சீராக்க உதவும் ஆடை. ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் தேவைக்கேற்ற வெதுவெதுப்பைப் பெற முடியும். ஹாங்காங்கைச் சேர்ந்த போலார் சீல் நிறுவனம் தயாரித்துள்ளது.

துர்நாற்றம் நீக்கி

வீட்டிலுள்ள குப்பைத்தொட்டி, ஷூ வைக்கும் இடம், குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்க உதவும் கருவி. புறஊதாக் கதிர் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. தைவானைச் சேர்ந்த வென்டிஃபிரெஷ் நிறுவனத்தின் தயாரிப்பு.

பைக் லாக்

ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி பைக் மற்றும் சைக்கிளை பூட்டவும், திறக்கவும் உதவும். தானே சார்ஜ் செய்துகொள்ளும் சோலார் பேட்டரியில் இயங்குகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த லாட்டிஸ் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு.

பயண ஆடை

பயணத்தின் போது அணிந்து கொள்ளும் ஆடையை பல வசதிகளுடன் வடிவமைத்துள்ளது பவ்பாக்ஸ் என்கிற நிறுவனம். வழக்கமான பாக்கெட்டுகளுடன், ஜிப்பில் பேனா, சார்ஜர், டேப்லெட், சன்கிளாஸ், குளிர்பானம் போன்றவை வைப்பதற்கு தனித்தனி பாக்கெட், கை கிளவுஸ், அவசர கால விசில் என பல வசதிகளும் இதில் உள்ளன. மைக்ரோ பைபர் துணியால் தைக்கப்பட்டுள்ளதால் புழுக்கமும் இருக்காது. ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனியாக நான்கு மாடல்களில் கிடைக்கிறது.

குழந்தைகள் டேபிள்

குழந்தைகள் அமர்ந்து விளையாடுவதற்கு ஏற்ற டேபிள். பல வகையான விளையாட்டுகளுடன், உலக வரைபடமும் உள்ளது. பாக்கர்கிட் நிறுவனம் தயாரித்துள்ள இதில், பொம்மைகள் வைக்க தனியாக பை, பேனா, பென்சில் வைக்கும் குடுவை, கரும் பலகை, 3 வயது குழந்தை முதல் 8 வயது சிறுவர்கள் வரை விளையாடும் விளையாட்டுப் பொருட்களும் உள்ளன. குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ப டேபிளின் உயரத்தையும் ஏற்றி இறக்க முடியும். நண்பர்களுடன் விளையாடுகையில் டேபிளின் அகலத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்.

SCROLL FOR NEXT