தொழில்நுட்பம்

செயலி புதிது: சவால் விடும் செயலி

செய்திப்பிரிவு

ஜாலியாக ரசித்துப் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு இணையத்தில் பஞ்சமில்லை. இத்தகைய நகைச்சுவை வீடியோக்களைத் தேடித் தொகுத்துத் தரும் செயலிகளும் அநேகம் இருக்கின்றன. அந்த வகையில் கொஞ்சம் புதுமையான ஒரு செயலி அறிமுகம் ஆகியுள்ளது. ‘டிரை நாட் டு ஸ்மைல்’ எனும் இந்தச் செயலியில் நகைச்சுவை வீடியோக்களைப் பார்த்து ரசிக்கலாம்.

ஆனால், அவ்வாறு பார்க்கும்போது சிரிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் சவால். ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும்போதும் எவ்வளவு நேரம் சிரிக்காமல் முகத்தை வைத்திருக்கிறீர்கள் என இந்தச் செயலி கணக்குப் போட்டு காண்பிக்கும். இந்தத் தகவலையும் உங்கள் சிரிப்பு முகத்தையும் கிளிக் செய்து சமூக ஊடகங்களிலும் பகிரலாம். ஐபோனுக்காக அறிமுகம் ஆகியிருக்கிறது இந்தச் செயலி.

SCROLL FOR NEXT