தொழில்நுட்பம்

சாம்சங் கேலக்சி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: AI உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

சான் ஜோஸ்: சாம்சங் கேலக்சி ஏ24 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் 17-ம் (புதன்கிழமை) தேதி நடைபெற்ற நிகழ்வில் இது அறிமுகமானது. கேலக்சி எஸ்24, கேலக்சி எஸ்24 பிளஸ் மற்றும் கேலக்சி எஸ்24 அல்ட்ரா என மூன்று மாடல்கள் இந்த வரிசையில் அறிமுகமாகி உள்ளது. இன்-பில்ட் ஏஐ டூல் உடன் இந்த போன் வெளிவந்துள்ள முதல் ஸ்மார்ட்போன் இது. (இது குறித்து கடந்த நவம்பரில் இந்து தமிழ் திசையில் பதிவு செய்திருந்தோம்)

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி எஸ்24 வரிசை போன்கள் அறிமுகமாகி உள்ளன.

  • கேலக்சி எஸ்24:
  • 6.2 இன்ச் டைனமிக் AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே
  • டெக்கா கோர் ப்ராஸசர்
  • 50.0 MP + 10.0 MP + 12.0 MP என பின்பக்கத்தில் மூன்று கேமரா
  • 12.0 MP கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 4,000mAh பேட்டரி
  • 8ஜிபி ரேம்
  • 256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • முன் எப்போதும் இல்லாத வகையில் பயனர்களின் தேடல் அனுபவம் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஏஐ துணையுடன் அழைப்புகளின் உரையாடலை நிகழ் நேரத்தில் மொழிபெயர்க்க, வாய்ஸ் ரெக்கார்டிங்கை உரையாக மாற்றவ, மற்றும் புகைப்படங்களை சிரமமின்றி எடிட் செய்யவும் முடியும். இது கேலக்சி எஸ்24 சீரிஸின் அனைத்து போன்களிலும் இடம் பெற்றுள்ளது.
  • இந்த போனின் ஆரம்ப விலை ரூ.79,999
  • இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. வரும் 20-ம் தேதிக்குள் முன்பதிவு செய்தால் ரூ.4,999 மதிப்புள்ள வயர்லெஸ் சார்ஜர் ட்யூயோவை பெறலாம்
  • கேலக்சி எஸ்24 பிளஸ்:
  • 6.7 இன்ச் டைனமிக் AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே
  • எஸ்24 மாடலில் இடம்பெற்றுள்ள அதே கேமரா அம்சம் மற்றும் அதே ப்ராஸசர்
  • 4,900mAh பேட்டரி
  • 12ஜிபி ரேம்
  • 256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ்
  • 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் ஆரம்ப விலை ரூ.1,09,999
  • கேலக்சி எஸ்24 அல்ட்ரா:
  • 6.8 இன்ச் டைனமிக் AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே
  • ஆக்டா கோர் ப்ராஸசர்
  • 200.0 MP + 50.0 MP + 12.0 MP + 10.0 MP என பின்பக்கத்தில் நான்கு கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 12ஜிபி ரேம்
  • 256ஜிபி / 512ஜிபி / 1டிபி என மூன்று விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்டுள்ளது
  • 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் ஆரம்ப விலை ரூ.1,39,999. விலையில் ரூ.5,000 சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
SCROLL FOR NEXT