சூப்பர்மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் விதத்தில் அமேசான் நிறுவனம் புதிய புரட்சியே செய்துள்ளது. பணியாளர்கள் இல்லாமல், பில் போட க்யூவில் நிற்காமல் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க அமேசான் வகை செய்துள்ளது.
அமேசான் கோ (Amazon Go) என்ற இந்த சூப்பர்மார்க்கெட்டின் சோதனை ஓட்டம் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் மேலே வைக்கப்பட்டிருக்கும் கேமரா வாடிக்கையாளரை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் வாங்கும் பொருட்கள் என்ன, திரும்ப வைக்கும் பொருட்கள் என்ன என்பதை பதிவு செய்துகொள்ளும்.
வாங்கிய பொருட்களுக்கான பில் விலை, வாடிக்கையாளர் கடையை விட்டுப் போகும்போது அவர்களின் கிரெடிட் கார்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். இதனால் பில் போட க்யூவில் நிற்க வேண்டியதில்லை.