கூ
குள் நிறுவனத்தின் கலை மற்றும் கலாச்சாரத் திட்டத்துக்கான செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதி இணையவாசிகள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலகில் உள்ள அருங்காட்சியகப் படைப்புகளை ரசிக்க வழி செய்கிறது இந்தச் செயலி. பயனாளிகள் தங்கள் செல்பிகளைச் சமர்ப்பித்தால், அதன் அம்சங்களை அலசி, ஆராய்ந்து அதனுடன் பொருந்தக்கூடிய கலைப் படைப்புகள் எவை என பரிந்துரைக்கும். உதாரணமாக, உங்களுடைய செல்பி படத்தை சமர்பித்தால், உங்களைப் போலவே தோற்றம் கொண்ட கலை படைப்பைப் பார்க்கலாம். இந்த அம்சம் துல்லியமாக இல்லாவிட்டாலும், சுவாரசியமாக இருப்பதாக இணையவாசிகள் சொல்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு: goo.gl/XLNGsh