பிக்சல் 8 போன் 
தொழில்நுட்பம்

கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 புரோ இந்தியா அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

கூகுள் நிறுவனத்தின் Made by Google நிகழ்வில் இந்த போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கூகுள் ஃப்ளாக்‌ஷிப் சிப்செட் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா இந்த 5ஜி போன்களில் இடம் பெற்றுள்ளது. இருந்தாலும் கூகுள் பிக்சல் போன்களின் பழைய டிசைனில் இந்த போன் வெளிவந்துள்ளது. கூகுள் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 புரோ போன்களின் அடுத்த வரிசை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிக்சல் 8 - சிறப்பு அம்சங்கள்

  • 6.2 இன்ச் OLED டிஸ்பிளே
  • டென்சர் ஜி3 சிப்செட்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 10.5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 4,575mAh பேட்டரி
  • 27 வாட்ஸ் அதிவேக ஒயர்டு சார்ஜிங் சப்போர்ட்
  • இந்த போனின் விலை ரூ.75,999

பிக்சல் 8 புரோ - சிறப்பு அம்சங்கள்

  • 6.7 இன்ச் QHD+ OLED டிஸ்பிளே
  • 5,050mAh பேட்டரி
  • 30 வாட்ஸ் அதிவேக ஒயர்டு சார்ஜிங் சப்போர்ட்
  • இந்த போனின் விலை ரூ.1,06,999
  • இயங்குதள அப்டேட் உட்பட 7 ஆண்டுகளுக்கான மென்பொருள் அப்டேட்டை இந்த போன்கள் கொண்டுள்ளன
SCROLL FOR NEXT