இ
ணைய கால் டாக்சி நிறுவனமான உபெர் செயலியை உருவாக்கியதன் மூலம் உலகம் முழுவதும் போக்குவரத்துத் துறை செயல்படும் விதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் டிரேவிஸ் கலானிக். சர்வதேச சாம்ராஜ்யமாக உருவெடுத்திருக்கும் உபெரின் இணை நிறுவனர் கலானிக் இந்த ஆண்டின் மத்தியில் அந்தப் பதவியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. பல்வேறு நகரங்களில் விதிமீறல் உள்ளிட்ட சர்ச்சைகளில் அந்த நிறுவனம் சிக்கியது. அதோடு பாலின பாகுபாடு மற்றும் பாலினத் தாக்குதல் தொடர்பான புகார்களும் சேர்ந்துகொள்ளவே முக்கிய முதலீட்டாளர்கள் கலானிக் பதவி விலக நிர்பந்தித்தனர். இதனால், உபெர் நிறுவனத்திலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.