தொழில்நுட்பம்

யாஹு தேடியந்திரத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய ஆளுமை நரேந்திர மோடி

ஐஏஎன்எஸ்

யாஹூ இந்தியா தேடியந்திரத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய ஆளுமை, பிரதமர் நரேந்திர மோடி என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வருட முடிவு நெருங்குவதால் பல நிறுவனங்கள், 2017-ல் முக்கியமான மைல்கல், சாதனைகள், புள்ளிவிவரங்கள் பற்றி வெளியிட்டு வருகின்றனர். யாஹூ நிறுவனமும் 2017 பற்றிய அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகளில் மோடி, கேஜ்ரிவால், சசிகலா உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது.

ஆதார் குறித்த செய்திகளே அதிக முறை தேடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜிஎஸ்டி பட்டியலில் உள்ளது. மேலும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் பெயர்களும் பட்டியலில் உள்ளன.

இந்திய மகளிர் க்ரிக்கெட் அணியை சேர்ந்த மித்தாலி ராஜ், நடிகை ஆதியா ஷெட்டி, மிரா ராஜ்புட், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், மலைகா அரோரா, அலியா பட், விராட் கோலி ஆகியோரது பெயர்களும் அதிக முறை தேடப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக, மறைந்த நடிகர் வினோத் கண்ணா, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரை விட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரே அதிக முறை தேடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT