கோப்புப்படம் 
தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு 14 இயங்குதள சிறப்பு அம்சங்கள்: வெகு விரைவில் வெளியீடு

செய்திப்பிரிவு

கலிபோர்னியா: வெகு விரைவில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 14 இயங்குதள அப்டேட்டை பயனர்களுக்கு வழங்க உள்ளது கூகுள் நிறுவனம். அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தற்போது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் பீட்டா 5 வெர்ஷன் வெளியாகி உள்ளது. இது தான் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வெளியீட்டுக்கு முன்னதாக வெளியாகும் கடைசி ப்ரீ-ரிலீஸ் வடிவமைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்காக இது வெளியிடப்பட்டுள்ளது. இது சார்ந்து பயனர்களின் கருத்துகளை கூகுள் பெற்று வருகிறது. அதை பொறுத்து நிலையான ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கட்டமைத்து, வெளியிடப்படும் என தெரிகிறது. முதற்கட்டமாக கூகுளின் பிக்சல் உட்பட குறிப்பிட்ட சில நிறுவனங்களைப் பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் முக்கிய அம்சங்கள்

  • பேட்டரி லைஃப் அதிகரிப்பு
  • நோட்டிபிகேஷன் ஃப்ளாஷஸ்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோ அக்சஸ்
  • மேம்படுத்தப்பட்ட பயனர் பாதுகாப்பு
  • பிராந்திய ரீதியான முன்னுரிமை
  • சாட்டிலைட் கனெக்டிவிட்டி
  • ஆப் குளோனிங்
  • ஷேரிங் ஆப்ஷன் மேம்பாடு
SCROLL FOR NEXT