தொழில்நுட்பம்

ஜிப்ரானிக்ஸின் BT கனெக்ட்: எல்லாவற்றையும் வயர்லெஸ்ஸாக மாற்றலாம்

கார்த்திக் கிருஷ்ணா

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் BT கனெக்ட் என்ற வயர்லெஸ் இணைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த BT இணைப்பு 3.5mm இன்புட் உள்ள எந்தவொரு சாதனத்தையும் வயர்லெஸ்ஸாக மாற்றும் திறன் கொண்டது .

பின்வரும் சாதனங்களை கன்வெர்ட் செய்து ஸ்மார்ட்ஃபோன், டேப்ளட் அல்லது கணினியிலிருந்து வயர் இல்லாமல் இசையைக் கேட்கலாம்.

# 3.5mm அல்லது RCA இன்புட் கொண்ட ஸ்பீக்கர்கள்.

# 3.5mm அல்லது RCA இன்புட் கொண்ட ஹோம் தியேட்டர்.

#ஆக்ஸ் இன்புட் கொண்ட கார் ஸ்டீரியோ.

#ஹெட்போன்கள்.

 BT கனெக்ட் மிகவும் லேசான சிறிய மாடலாக, பயன்படுத்தவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் பில்ட்-இன் மைக் இருப்பதால், இணைக்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோனிலிருந்து வரும் அழைப்புகளை எடுக்கமுடியும்.

இந்த இணைப்பு, ஆடியோ அவுட்புட்டிற்கான 3.5mm ஜேக்குடன் வருகிறது. வால்யூம் கண்ட்ரோல் பட்டன்கள், எம்பி3 இயக்க மைக்ரோ எஸ்டி ஸ்லாட், மீடியா கண்ட்ரோல் பட்டன் மற்றும் ஆன்/ஆஃப் போன்ற அம்சங்களும் உள்ளன.

இந்த கருவி பற்றி பேசிய இந்திய ஜிப்ரானிக்ஸின் இயக்குனர் பிரதீப் தோஷி, "வயர்லெஸ் தயாரிப்புகள் என்றாலே, எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி ஜிப்ரானிக்ஸ் தான் முன்னணியில் இருக்கிறது. வயர்லெஸ் சந்தையில் மீண்டும் ஒரு முறை எங்கள் அடித்தளத்தை வலுப்படுத்த, BT கனெக்ட் ஸ்மார்ட் போர்டபிள் வயர்லெஸ் மாட்யூலை வழங்குகிறோம். அனைத்து காலத்திற்கும் ஏற்றவாறு 'ஸ்மார்ட்' என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறோம். வயர்லெஸ் அம்சத்தை விரும்புபவர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் அம்சங்களின் செயல்பாட்டு வடிவத்தை மனதில் வைத்து, எந்த இடத்திலும் எந்தவொரு சாதனத்திலும் இணைக்கும்படி வடிவமைத்துள்ளோம்." என்று கூறினார்.

 இதில் ப்ளூடூத் வரம்பானது எந்தவித குறுக்கீடுமின்றி 10 மீட்டர்கள் வரை இருக்கும். கிளிப் டிசைன் இருப்பதால் கைகளிலேயே வைத்துக் கொள்ளத் தேவையில்லை. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணக் கலவையில் இந்த BT கனெக்ட் கிடைக்கிறது. விலை ரூ.800/-

SCROLL FOR NEXT