தொழில்நுட்பம்

உங்கள் ட்விட்டர் கணக்குக்கு இனி 50 எழுத்துகளில் பெயர் சூட்டலாம்

செய்திப்பிரிவு

ட்விட்டர் பயனாளர்கள் இனி தங்கள் கணக்கின் பெயரை 50 எழுத்துகளில் சூட்டிக்கொள்ளலாம். இதுவரை, ட்விட்டர் கணக்குகளின் பெயர்களுக்கு 20 எழுத்துகள் மட்டுமே அதிகபட்சமாக இருந்தது.

இந்த புதிய நடைமுறையை வெள்ளிக்கிழமை அன்று ட்விட்டர் அறிவித்துள்ளது.

இதன்மூலம் ட்விட்டர் பயனர்கள் தங்கள் பெயருடன் கூடுதல் பெயரையோ, எமோஜிக்களையோ இனி சேர்க்க முடியும்.

இதையடுத்து பெரிய பெயர்களைக் கொண்டிருந்தவர்களுக்கும், தங்கள் பெயர்களில் தனித்துவத்தைச் சேர்க்க நினைத்தவர்களுக்கும் நிவாரணம் கிடைத்துள்ளது.

முன்னதாக நவ.7 அன்று ட்விட்டர் அனைத்து பயனர்களும் ட்வீட் செய்ய 280 எழுத்துருக்கள் என்ற எல்லையை நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த புதிய முன்னெடுப்புக்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துவருகின்றன.

SCROLL FOR NEXT