தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்: புற்று நோய் கண்டறியும் கருவி

செய்திப்பிரிவு

புற்று நோய் கண்டறியும் கருவி

தோல் புற்றுநோயை கண்டறிவதற்கு புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது. உடம்பில் இந்த கருவியை வைத்துவிடவேண்டும். உடல் செல்களில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தை வைத்து தோல் புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை சொல்லிவிடும்.

ஸ்மார்ட் பிரிண்டர்

பொதுவாக நாம் ஸ்மார்ட்போன்களில் புகைப்படம் எடுக்கும்போது அதை பிரிண்ட் போடுவதில்லை. ஆனால் இந்தக் கருவியை ஸ்மார்ட்போனுடன் இணைத்துவிட்டால் போதும் நாம் போன் மூலம் எடுக்கிற புகைப்படங்களை உடனடியாக பிரிண்ட் எடுத்துக் கொள்ளமுடியும்.

விளையாட்டு சுவர்

குழந்தைகள் எதிலாவது ஏறி விளையாடுவதில் ஆர்வம் உடையவர்கள். அதற்கேற்றார்போல் ஒரு மர ஏணியை வடிவமைத்துள்ளனர். இதில் குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்களை சேர்த்துக் கொள்ளமுடியும். ஸ்கேண்டிநேவியன் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாசா புதிய விமானம்

வின்வெளித் துறையில் முன்னணியில் உள்ள அமெரிக்காவினஅ நாசா ஆராய்ச்சி மையம் தற்போது புதிய விமானத்தை உருவாக்கி வருகிறது. அதாவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பயணிகள் விமானத்தை விட அதிக திறனில் இயங்கும் ஹைபிரிட் ஜெட்லைனர் என்ற புதிய விமானத்தை உருவாக்கி வருகிறது. அதே எரிபொருளில் 10 சதவீதம் அதிக திறன் கொண்டு இந்த விமானங்கள் இயங்கும். மேலே பறக்கும் போது விமானத்தின் மேல் பகுதியில் காற்று வேகமாக அடிக்கும். இந்த காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து அதன்மூலம் விமானத்தின் திறனை அதிகப்படுத்த நாசா திட்டமிட்டு வருகிறது.

SCROLL FOR NEXT