தொழில்நுட்பம்

பொருள் புதுசு: பயணிகள் டிரோன்

செய்திப்பிரிவு

இதுவரை பொருட்களை எடுத்துச் செல்ல மட்டுமே டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. முதன் முதலில் இரண்டு பேர் செல்லக்கூடிய் டிரோன்கள் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த டிரோன்கள் 360 கிலோ எடையை தாங்கக்கூடியது. தொடர்ச்சியாக 25 நிமிடம் பயணிக்கக் கூடியது.

காகித விமானம்

குழந்தைகள் காகிதங்களில் விமானம், கப்பல் போன்றவற்றை செய்து விளையாடுவார்கள். ஆனால் இந்த காகித விமானத்தை நமது மொபைலில் உள்ள அப்ளிகேஷன் மூலம் இயக்கமுடியும். வேகம், எந்த திசையில் செல்லவேண்டும் என்பது உட்பட மொபைல் மூலம் இயக்கமுடியும். காகித விமானத்தில் எலெக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது.

சூரிய அடுப்பு

சூரிய சக்தியை பயன்படுத்தி தண்ணீரை கொதிக்கவைக்கவும் உணவு சமைக்கவும் புதிய வகை அடுப்பை வடிவமைத்துள்ளனர். ஒரு குழாயுடன் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் தண்ணீரை ஊற்றி சுட வைத்துக் கொள்ளமுடியும். மேலும் காய்களையும் வேகவைக்கமுடியும்.

SCROLL FOR NEXT