இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் நிறுவனம் நோட் 30 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது.
- 6.78 இன்ச் ஃபுள் ஹெச்.டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- ஆக்டோ-கோர் மீடியாடெக் டிமான்சிட்டி 6080 சிப்செட்
- 108 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- ட்யூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- யுஎஸ்பி டைப்-சி
- 5,000mAh பேட்டரி
- 45 வாட்ஸ் ஹைப்பர் சார்ஜிங்
- 5ஜி சப்போர்ட்
- 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட போனின் விலை ரூ.14,999
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட போனின் விலை ரூ.15,999
- விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது