சூர்யா, கைதான நடராஜ், பெஞ்​சமின், ஆகாஷ்.

 
தமிழகம்

திருவள்ளூர் | நண்பன் கொலைக்கு பழிக்​குப் பழியாக இளைஞர் கொலை: ரவுடி உட்பட 3 பேரை கைது

செய்திப்பிரிவு

திரு​வள்​ளூர்: திருவள்ளூர் அருகே வெங்​கல் பகு​தி​யில் நண்​பனை கொன்​ற​தால் பழிக்​குப் பழி​யாக இளைஞர் கொலை செய்தது தொடர்​பாக ரவுடி உட்பட 3 பேரை போலீ​ஸார் கைதுசெய்​தனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி பகு​தி​யைச் சேர்ந்​தவர் நடராஜ் என்​கிற நவமணி. ரவுடி​யான இவர் மீது கும்​மிடிப்​பூண்டி சிப்​காட், பொன்​னேரி உள்​ளிட்ட காவல் நிலை​யங்​களில் 15-க்​கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன.

ஆவடிடேங்க் பேக்​டரி காவல் நிலைய எல்​லைப் பகு​தி​களில், சந்​தேகத்​துக்​கிட​மான வகை​யில் மது​போதை​யில் சுற்​றிய நடராஜை போலீ​ஸார் பிடித்து விசா​ரித்​தனர்.

அவ்​வி​சா​ரணை​யில் நடராஜ், ஆவடி அருகே உள்ள பொத்​தூர் பகு​தி​யில் வசித்து வந்த சூர்​யா(20) என்ற இளைஞரை கடந்த 5-ம் தேதி நண்​பர்​களு​டன் இணைந்து கொலை செய்​தது தெரிய​வந்​தது.

சம்​பவம் நடந்த இடம் வெங்​கல் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்​டது என்​ப​தால், ஆவடி டேங்க் பேக்டரி போலீ​ஸார் நடராஜை வெங்​கல் போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர்.

தொடர்ந்து வெங்​கல் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து நடராஜை கொலை நடந்த இடத்​துக்கு அழைத்​துச் சென்று சூர்​யா​வின் உடலைக்கைப்​பற்​றி, பிரேதப் பரிசோதனைக்​காக அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்​து,நடராஜின் நண்​பர்கள்பெஞ்​சமின்(20), ஆகாஷ்(25) ஆகியோரை நேற்று கைது செய்​தனர். கைதான 3 பேரிடம் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் தெரிய வந்​த​தாவது: ஆவடி அருகே உள்ள பொத்​தூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் நிலத்​தரகர் சதீஷ்(38). ரவுடி நடராஜின் நெருங்​கிய நண்​ப​னான இவர், கடந்த 1-ம் தேதி கொலை செய்​யப்​பட்​டார்.

இது தொடர்​பாக அதே பகு​தி​யைச் சேர்ந்த பரத்​(20) என்ற இளைஞரை ஆவடி டேங்க் பேக்​டரி போலீ​ஸார் ஏற்​கெனவே கைது செய்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், தன் நண்பன் சதீஷை கொலை செய்​த​தால், அதற்கு பழி தீர்க்​கும் வகை​யில் பரத்​தின் நெருங்​கிய நண்​ப​னான சூர்​யாவை கொல்ல நடராஜ் திட்​ட​மிட்​டார்.

அதன்​படி கடந்த 5-ம் தேதி நடராஜ், தனக்கு ஏற்​கெனவே அறி​முக​மான சூர்​யாவை மது அருந்த வரு​மாறு ஊத்​துக்​கோட்டை பகு​திக்கு அழைத்​துச் சென்​று, தன் நண்​பர்​கள் பெஞ்​சமின், ஆகாஷ் ஆகியோர் உதவி​யுடன் காக்​க​வாக்​கம் பகு​தி​யில் வெட்டி கொலை செய்​து, வெங்​கல் பகு​தி​யில் உள்ள காப்​புக்​காட்​டில் வீசி​யுள்​ளார் என போலீ​ஸார்​ தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT