சென்னை: வழிபாடு என்பது மதச்சலுகை அல்ல, அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
வழக்கறிஞர் மனுராஜ் சண்முக சுந்தரம் எழுதிய 'தி பீப் பிளஸ் சாங்க்டம் புத்தக வெளி யீட்டு விழா. மாநகராட்சி விக்டோரியா அரங்கில் நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, மூத்த வழக்கறிஞர் ரமணி நடராஜன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: இது வெறும் புத்தக வெளியீடு மட்டுமல்லாமல் நமது சமுதாயம் சமத்துவத்தை நோக்கி கடந்து வந்த பாதையையும். கடந்து வந்த கடினமான போராட்டங்களையும் நினைவு கூரும் வரலாற்றுத் தருண மாகும். கோயில் நுழைவு போராட்டங்கள் ஏன் முக்கியத்துவம் பெற்றன ? அம்பேத்கர், பெரியார் ஏன் வரலாற்றில் வளவு உயரமான ஆளுமைகளாக நிற்கிறார்கள் என்பதற்கான வரலாற்று பின்னணியை இந்த புத்தகம் விளக்குகிறது.
வைக்கம் போராட்டம் தொடங்கி 1925-ம் ஆண்டின் மெட்ராஸ் இந்து சமய அறநிலையச் சட்டம் மற்றும் தற்போதைய நடைமுறை சட்டங்கள் வரை அனைத்து வரலாற்று நிகழ்வுகளும் இதில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. வழிபாடு என்பது மதச்சலுகை அல்ல. அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை.
கடந்த காலத்தில் இருந்து சுய மரியாதை மற்றும் சமூக நீதி போராட்டங்கள் மூலம் நாம் எவ்வளவு தூரம் முன்னேறி வந்துள்ளோம் என்பதை உணர்த்தும் வரலாற்று ஆவணமாக இந்த நூல் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசும்போது, "வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், சமூக நீதிக்கான வரலாற்று பின்னணியை விளக்கும் வகையில் இந்த புத்தகம் முக்கியமான காலகட்டத்தில் வெளிவந்துள்ளது.
நம் உரிமைகளுக்காகவும், சமூக மாற்றத்துக்காகவும் கடந்து வந்த போராட்ட பாதையை இளையதலை முறையினர் அறிந்துகொள்வது அவசியம். அதற்கு இத்தகைய நூல்கள் சிறந்த வழிகாட்டியாக அமையும். சமூக நீதிக்கான போராட்டங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இந்த புத்தகம் ஒரு முக்கிய ஆவணமாக திகழும்" என்றார்.