மீன்பிடி வலையில் சிக்கிய பீரங்கி குண்டு.

 
தமிழகம்

பழவேற்காடு கடலில் மீன்பிடி வலையில் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டு சிக்கியது

செய்திப்பிரிவு

பொன்னேரி: பழவேற்காடு பகு​தி​ கடலில் மீன்​பிடி வலை​யில் சிக்​கிய 2-ம் உலகப் போரில் பயன்​படுத்​தப்​பட்ட பீரங்கி குண்​டால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது.

பொன்​னேரி அருகே உள்ள பழவேற்​காடு, அதையொட்​டி​ உள்ள 30-க்​கும் மேற்பட்ட மீனவ கிராமங்​களைச் சேர்ந்த மீனவர்​கள் மீன் பிடி தொழிலில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

அந்த வகை​யில், நேற்று முன் தினம் இரவு, பழவேற்​காட்டை அடுத்த பசி​யா​வரம் மீனவ கிராமத்​தைச் சேர்ந்த தேவபிர​காஷ் (35), 4 பேருடன் பழவேற்​காடு பகு​தி​யில், வங்​காள விரி​குடா கடலில் மீன் பிடித்துக் கொண்​டிருந்​தார்.

அப்​போது மீன் பிடி வலை​யில், துருப்​பிடித்த நிலை​யில் ஒரு அடி உயரம் மற்​றும் 10 கிலோ எடை​உள்ள இரும்​பாலான உருளை போன்ற மர்மப் பொருள் சிக்​கியது.

அதிர்ச்​சி​யடைந்த தேவபிர​காஷ், திருப்​பாலை​வனம் போலீ​ஸாருக்கு தகவல் அளித்​து​விட்​டு, மர்மப் பொருளு​டன் பழவேற்​காடு, கடற்​கரைக்கு திரும்​பி​னார். அங்கு விரைந்த போலீ​ஸார், மீன்​பிடி வலை​யில் சிக்​கிய மர்மப் பொருளை மீட்​டனர்.

ஆவடி, வெடிகுண்டு நிபுணர்​களின் சோதனை​யில், மீன்​பிடி வலை​யில் சிக்​கிய மர்மப் பொருள், 2-ம் உலகப் போரில் பயன்​படுத்​தப்​பட்ட பீரங்கி குண்டு என்​பது தெரிய வந்​தது.

இதையடுத்​து, போலீ​ஸார், திருப்​பாலை​வனம் பகு​தி​யில் திறந்​தவெளி​யில் பள்​ளம் தோண்​டி, பாது​காப்​பான முறை​யில் பீரங்கி குண்டை புதைத்து வைத்​துள்​ளனர்.

மேலும், இதுதொடர்​பாக வழக்​குப் பதிவு செய்​துள்ள போலீ​ஸார், பீரங்கி குண்டு குறித்து நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்​து, பிறகு நீதி​மன்ற அனு​ம​தி​யுடன் பீரங்கி குண்டை செயலிழக்க வைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT