திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைக் கணக்கெடுக்கும் பணியை நேற்று வேளாண்மைத் துறையினர் தொடங்கினர்.
திருவாரூர் அருகே காவனூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) ஹேமா ஹெப்சிமா நிர்மலா தலைமையில் வேளாண் உதவி அலுவலர்கள் ஆய்வு செய்து கணக்கெடுத்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் வேளாண்மை துணை இயக்குநர் கூறும்போது, “கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் 48 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்து, பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அனைத்திலும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்தில் இப்பணிகள் நிறைவுபெறும்’’ என்றார்.