காஸ் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் விறகு அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், புதிய அடுப்புகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் தொழிலாளி. | படம்: ச.கார்த்திகேயன் | 

 
தமிழகம்

வணிக சமையல் காஸ் தட்டுப்பாடு எதிரொலி: சென்னையில் விறகு அடுப்பு உற்பத்தி அதிகரிப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: வணிக சமையல் காஸ் தட்​டுப்​பாடு எதிரொலி​யாக சென்​னை​யில் விறகு அடுப்பு உற்​பத்தி அதி​கரித்​துள்​ளது. அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் இரான் இடையி​லான போர் காரண​மாக இந்​தியா முழு​வதும் சமையல் காஸ் தட்டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது.

வணிக சிலிண்​டர்​கள் கிடைப்​பது அரி​தாகி​விட்​டது. வீட்டு உபயோக சிலிண்​டர் பதிவு, ஏற்​கெனவே பதிவு செய்த தேதியி​லிருந்​து, அடுத்த சிலிண்​டர் பதிவு செய்​வதற்​கான இடைவெளி 21 நாட்​களாக இருந்​தது, நகர்ப்​புறங்​களில் 25 நாட்​களாக​வும், ஊரக பகு​தி​களில் 45 நாட்​களாக​வும் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

          

வீட்டு உபயோக சிலிண்​டரை ஐவிஆர்​எஸ், செயலி, மிஸ்டு கால் என பல்​வேறு முறை​களில் முயன்​றும் பதிவு செய்ய முடிய​வில்லை என பொது​மக்​கள் புகார் தெரி​வித்​து​வரு​கின்​றனர். வணிக சமையல் காஸ் கிடைக்​காத​தால், பல ஓட்​டல்​கள் மூடப்​பட்​டன.

சில ஓட்​டல்​களில் உணவு தயாரிப்பு அளவு குறைப்​பு, 4 வகை பொரியல், 3 வகை சட்னி கொடுக்​காமல் ஒரே வகை பொரியல், சட்னி கொடுப்​பது என சிக்கன நடவடிக்​கைகளை மேற்​கொண்​டுள்​ளன. சில ஓட்​டல்​கள் விறகு அடுப்​பு​களை பயன்​படுத்தி உணவு தயாரித்து வரு​கின்​றன.

மேலும் மாணவர் தங்​கும் விடு​தி​கள், பயணி​யர் தங்​கும் விடு​தி​கள், தரை தளம் மட்​டும் கொண்ட தனி வீடு​கள் போன்​றவற்​றில் சுடு​தண்​ணீர் காய வைக்​க​வும், டீக்​கடைகள் பலவற்​றி​லும் விறகு அடுப்​பு​களை பயன்​படுத்த தொடங்​கி​யுள்​ளனர்.

இதனால் சென்​னை​யில் விறகு அடுப்​பு​களின் பயன்​பாடு அதி​கரித்​திருப்​ப​தால், அவற்​றின் உற்​பத்​தி​யும் அதி​கரித்​துள்​ளது. சென்னை பேசின் பாலம் அரு​கில் 24 மணி நேர​மும் விறகு அடுப்​பு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றனர்.

தகடு​கள், கம்​பிகளை வெட்​டி, வெல்​டிங் செய்​வது ஒரு இடத்​தி​லும், அவற்​றின் கூர்​மை​யான பகு​தி​களை நீக்​கு​வது, பெயின்ட் அடிப்​பது போன்ற தரத்தை கூட்​டும் பணி​கள் வெவ்​வேறு இடங்​களி​லும் நடை​பெறுகிறது. அதனால் வால்​டாக்ஸ் சாலை​யில் கடந்த சில நாட்​களாக விறகு அடுப்​பு​கள் 3 சக்கர வண்​டிகளில் ஏற்​றிச் சென்​றவண்​ணம் உள்​ளது.

இது தொடர்​பாக பேசின் பாலம் அரு​கில், கூட்ஸ் ஷெட் சாலை​யில் இயங்கி வரும் காஸ் மற்​றும் விறகு அடுப்பு உற்​பத்தி தொழிற்​சாலை பணி​யாளர்​களிடம் கேட்​ட​போது, “இதற்கு முன்பு காஸ் அடுப்​பு​களை தான் அதி​க​மாக செய்​வோம்.

நாளொன்​றுக்கு 3 விறகு அடுப்​பு​கள்வரை செய்​வோம். இப்​போது விறகு அடுப்பு ஆர்​டர் அதி​கரித் ​திருப்​ப​தால், காஸ் அடுப்​பு​கள் செய்​வதை நிறுத்​திவிட்​டோம். நாளொன்​றுக்கு 15 விறகு அடுப்​பு​களை செய்​கிறோம்.

இதற்​கான மூலப்​பொருட்​களான இரும்பு பிளேட் மற்​றும் எல் வடிவ கம்​பிகள் தேவை அதி​கரித்​துள்ள நிலை​யில், அவற்​றின் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ளது. ஆனால் எங்​கள் செய்​கூலி உயர​வில்​லை” என்​றனர்.

SCROLL FOR NEXT