ராஜபாளையத்தில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி.

 
தமிழகம்

ரூ.2,500 மகளிர் உரிமை தொகை எப்போது? - அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பெண்கள்

செய்திப்பிரிவு

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நடந்த மருத்துவ முகாமில் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வி எழுப்பிய பெண்களிடம், அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், கட்டாயம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி அளித்தார்.

ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரில் மருத்துவ முகாம் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இம்முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு, இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இம்முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுகையில், ‘பெண்கள் சிலர் தமிழக வெற்றிக் கழக தேர்தல் வாக்குறுதியில் கூறிய ரூ.2,500 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர்.

தற்போது முந்தைய அரசு அறிவித்து வழங்கி வந்த ரூ.1,000 உரிமைத் தொகை தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

நீண்ட நடைமுறை என்பதால், கொஞ்சம் கால அவகாசம் கேட்கிறோம். கட்டாயம் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்றார்.

SCROLL FOR NEXT