தமிழகம்

புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தலைமைச் செயலகம் முன்பு திண்டிவனம் பெண் தீக்குளிக்க முயற்சி

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை, தலைமை செயல​கத்​தில் உள்ள முதல்​வரின் தனி பிரி​வில், தினசரி ஏராள​மானோர் வந்து தங்​கள் பிரச்​சினை​களை கோரிக்கை மனு​வாக அளிப்​பது வழக்​கம்.

இந்​நிலை​யில், நேற்று காலை விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனத்​தைச் சேர்ந்த சாமுண்​டீஸ்​வரி (32) என்​பவர் தலைமை செயல​கம் வந்​தார்.

தலை​மைச் செயல​கம் உள்ளே செல்ல அனை​வரும் காவல்​துறை​யின் சோதனைக்​காக நின்று கொண்​டிருந்த போது, சாமுண்​டீஸ்​வரி திடீரென தனது தலை​யிலும், உடலிலும் டீசலை ஊற்​றிக் கொள்ள முயன்​றார். இதைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்த அங்கு பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த காவல்​துறை​யினர், உடனடி​யாக சென்று அப்​பெண்ணை தடுத்து நிறுத்​தினர்.

அவரிட​மிருந்த டீசல் கேனைப் பறி​முதல் செய்த போலீ​ஸார், அவர் மீது தண்​ணீரை ஊற்​றி பாது​காப்​பான இடத்​துக்கு அழைத்​துச் சென்​றனர். அதனைத் தொடர்ந்​து, தற்​கொலை முயற்சி குற்​றச்​சாட்​டின் கீழ், அவரை கைது செய்த போலீ​ஸார், கோட்டை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர்.

முதற்கட்ட விசா​ரணை​யில், சாமுண்​டீஸ்​வரி ஏற்​க​னவே தனது தனிப்​பட்ட பிரச்​சினை தொடர்​பாக முதலமைச்​சர் தனிப்​ பிரி​வில் புகார் மனு ஒன்றை அளித்​திருந்​த​தாக​வும், அந்​தப் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​ப​டாத​தால் ஏற்​பட்ட விரக்தி மற்​றும் மன உளைச்​சல் காரண​மாகவே, அவர் இந்த முடிவை எடுத்​த​தாக தெரிய வந்​தது.

SCROLL FOR NEXT