தமிழகம்

காற்றாலை மின் உற்பத்தியில் புதிய உச்சம்: இந்தாண்டு 36-வது முறையாக 100 மில்லியன் யூனிட்டுகளை கடந்து சாதனை

செய்திப்பிரிவு

சென்னை: இந்​தாண்டு காற்​றாலை மின் உற்​பத்​தி​யில் புதிய உச்​சத்தை தமிழகம் அடைந்​துள்​ளது.

36-வது முறை​யாக 100 மில்​லியன் யூனிட்​களை கடந்து சாதனை படைத்​துள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். இந்​தி​யா​வில் குஜ​ராத்​துக்கு அடுத்​தப்​படி​யாக தமிழ்​நாடு அதிக காற்​றாலை மின் கட்​டமைப்பை கொண்​டுள்​ளது. தமிழகத்​தில் தனி​யார் நிறு​வனங்​கள் தற்​போதைய நில​வரப்​படி, 9,500 மெகா வாட் திறனில், காற்​றாலை மின் உற்​பத்தி நிலை​யங்​களை அமைத்து உள்​ளன.

இந்​தி​யா​வின் மிகப்​பெரிய காற்​றாலை பண்​ணை​களில் ஒன்​றான முப்​பந்​தல் காற்​றாலை பண்ணை கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் இயங்கி வரு​கிறது.

இந்நிலையில், இந்​தாண்டு மே மாதம், காற்​றாலை சீசன் தொடங்​கிய​தில் இருந்​து, காற்​றாலைகளில் தின​மும் சராசரி​யாக, 80 மில்​லியன் யூனிட் மின்​சா​ரம் கிடைக்​கப்​பெற்​றது. தற்​போது இந்​தாண்​டுக்​கான காற்​றாலை மின் உற்​பத்தி புதிய உச்​சத்தை தொட்டு சாதனை படைத்​துள்​ளது.

அதன்​படி, நடப்​பாண்டு மட்​டும் 36-வது முறை​யாக தினசரி மின் உற்​பத்தி 100 மில்​லியன் யூனிட்டை கடந்​து, கடந்த 2025-ம் ஆண்​டில் எட்​டப்​பட்ட 35 முறை என்ற சாதனையை முறியடித்​துள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

3,291 மில்​லியன் யூனிட்: கடந்த ஏப்​ரல் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரையி​லான காலக்​கட்​டத்​தில் மின்​வாரி​யம் மொத்​த​மாக 8,491 கோடி மில்​லியன் யூனிட் காற்​றாலை மின்​சா​ரத்தை பெற்​றுள்​ளது.

ஜூலை மாதம் மட்​டும் 3,291 மில்​லியன் யூனிட் மின்​சார தொகுப்​பில் சேர்க்​கப்​பட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். வரும் நாட்​களில் காற்​றின் வேகம் அதி​கரிக்​கக்​கூடும் என கூறப்​படு​வ​தால், காற்​றாலை மின் உற்​பத்தி மிக அதிக அளவை எட்​டும்​ என தகவல்​ வெளி​யாகி உள்​ளது.

SCROLL FOR NEXT