ஸ்டாலின்

 
தமிழகம்

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா? - திமுக தலைவர் ஸ்டாலின் பதில்

வெற்றி மயிலோன்

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.

சமீபத்தில் முன்​னாள் அமைச்​சர் கே.என்​.நேரு பேசி​யபோது, “சட்​டப்​பேர​வை​யில் ‘எங்கே உங்க அப்​பாவை காணோம்’ என்று திமுக தலை​வரை குறிப்​பிட்டு முதல்​வர் விஜய் பேசி இருக்​கிறார். மிக விரை​வாக சட்​டப்​பேர​வையில் அவர் பொறுப்​பேற்​பார். அது உறு​தி” எனத் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை தொகுதிகள் மற்றும் முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு ஆகிய 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளதால், மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT