தமிழகம்

கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? - அண்ணா அறிவாலயத்தில் தீவிர ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுமறைவைத் தொடர்ந்து காலியாகியுள்ள கொளத்தூர் தொகுதிஇடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் நேற்று தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது.

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம், கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமாசெய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதில், சமீபத்தில்மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் மட்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. விரைவில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட மற்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படு கிறது.

இந்நிலையில், கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் கொளத்தூர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக என்ன முடிவுஎடுக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், கடந்த தேர்தலில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததை தவெகவினர் கடுமையாக விமர்சித்தது தான்.

குறிப்பாக, முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில், ‘அப்பாவைக் காணோம்’ என்று குறிப்பிட்டதும், ‘கொளத்தூரில் உங்கள் தலைவருக்குக் கொத்துப் புரோட்டா போட்டுவிட்டோம்’ என்று தவெகவினர் விமர்சித்ததும் திமுகவினரிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. இப்படியான சூழலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சி மீது அதிருப்தி: இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறும்போது, ‘‘திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் துரைமுருகன், ஆ.ராசா, க.பொன்முடி, எ.வ.வேலு, ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், ‘மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தற்போது தவெக அரசு மீதுமக்கள் மத்தியில் அதிருப்தியான சூழல் நிலவுகிறது.

எனவே, வரவுள்ள இடைத்தேர்தலில் நமக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். நீங்கள் மீண்டும் கொளத்தூரில் போட்டியிடவேண்டும்; வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும்' என வலியுறுத்தினர்.

இதற்குப் பதிலளித்த ஸ்டாலின், ‘இப்போதைக்கு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். பாபு மறைவுக்குப் பிறகு தொகுதியின் கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து முதலில் விரிவாக ஆய்வுசெய்வோம். அதன்பிறகு உரிய முடிவை எடுக்கலாம்’’ என்று கூறியதாக தெரிவித்தன.

இதற்கிடையே இக்கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ‘‘கொளத்தூர் இடைத்தேர்தல் தொடர்பாக நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை; அனைவரும் டி.வி.தான் பார்த்துக் கொண்டிருந் தோம்’’ என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT