தமிழகம்

பேரவை துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: பாதிக்கப்பட்ட நபரின் வழக்கறிஞர் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்​டம் துறையூர் பகுதி​யைச் சேர்ந்​தவர் கார்த்​திக் குமார். கடந்த 8-ம் தேதி தனது பகுதி​ பிரச்சினை தொடர்​பாக முறை​யிடுவதற்​காக சென்ற இவரை, துறையூர் தொகுதி எம்​எல்​ஏவும், சட்​டப்​பேரவை துணைத் தலை​வரு​மான ரவி சங்​கர் தாக்​கிய​தாக புகார் எழுந்​தது.

இது​தொடர்​பாக கார்த்​திக்​குமார் புகார் அளித்​திருந்​தார். விசாரணைக்காக கார்த்​திக் குமார், தனது வழக்​கறிஞர் பொன் முருகேசனுடன் நேற்று திருச்சி ஏடிஎஸ்பி அலு​வல​கத்​தில் ஆஜராக வந்​தார். அப்​போது ஏடிஎஸ்பி இல்​லாததால், விசா​ரணை நடை​பெறவில்லை. பின்​னர் இது​தொடர்​பாக கார்த்​திக் குமாரின் வழக்​கறிஞர் பொன் முருகேசன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்த விவகாரம் தொடர்​பாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்த வேண்​டும். உரிய நட​வடிக்கை இல்​லாத பட்​சத்​தில் உயர் நீதி​மன்​றத்தை நாடுவோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT