தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சுகன்யா கையில் சூட்கேஸுடன் பிரச்சாரம் செய்கிறார். | கோப்புப் படம்

 
தமிழகம்

தாராபுரத்தில் முன்னாள் அமைச்சர்களின் வியூகமும் களப்பணியும் திமுகவுக்கு கைகொடுக்குமா?

எம்.நாகராஜன்

தாராபுரம்: ​தா​ராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப் பேரவைத் தொகுதி​களுக்கான இடைத்​தேர்தல் களம் தமிழக அரசியலில் தற்போது கவனத்தை ஈர்த்​துள்ளது. ஆளும் தவெக மற்றும் கடந்த தேர்தலில் வென்ற அதிமுகவின் சவால்களை எதிர்​கொள்​ள​வும், திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவும் திமுக தலைமை மூத்த தலைவர்​களைக் களமிறக்​கி​யுள்ளது.

தாராபுரம் தொகுதியில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளான முன்னாள் அமைச்​சர்கள் கே.என்​.நேரு, வி.செந்​தில்​பாலாஜி, அர.சக்​கர​பாணி, ஐ.பெரிய​சாமி, மு.பெ.​சாமி​நாதன் ஆகியோர் முகாமிட்டு தேர்தல் பணிகளைத் தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர். தாராபுரம் தொகுதியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய, திமுக மேலிடம் ஒவ்வொரு மூத்த நிர்வாகி​களுக்கும் தனித்தனி பொறுப்புகளை வழங்கி வியூகம் வகுத்​துள்ளது.

தாராபுரம் நகரம் மற்றும் சுற்றி​யுள்ள கிராமப்புற பகுதி​களில் உள்ள வாக்குச்​சாவடிகள் வாரியாகக் கட்சியை ஒருங்​கிணைக்க மூத்த நிர்வாகிகள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தவெக வேட்பாள​ருக்கு விவசா​யிகள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பை சாதகமாகப் பயன்படுத்தி, விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்​களைச் சந்தித்து திமுக அரசின் நலத்திட்​டங்களை விளக்கி ஆதரவு திரட்டி வருகின்​றனர்.

கடந்த காலங்​களில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் குறிப்பாக வேளாண் துறை சார்ந்த நலத்திட்​டங்களை வாக்காளர்​களின் இல்லங்கள் தோறும் கொண்டு சேர்க்​க​வும், ஒவ்வொரு வாக்குச்​சாவடிக்கும் தேர்தல் பொறுப்​பாளர்களாக அனுபவ​மிக்க ஒன்றிய செயலாளர் நிலையில் உள்ள நிர்வாகிகளை நியமிக்​கவும் திட்ட​மிட்​டுள்​ளனர்.

தவெக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டு​களுக்கு உடனுக்​குடன் புள்ளி விவரங்​களுடன் கூடிய பதில்களை அளித்து பிரசாரக் களத்தில் ஆதிக்கம் செலுத்​தவும் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்​கப்​பட்​டுள்ளது. திமுக முன்னாள் அமைச்​சர்​களின் ஒருங்​கிணைந்த தேர்தல் வியூகம் திமுக வேட்பாளரின் வெற்றியை எவ்வளவு தூரம் உறுதி செய்யப்போகிறது என்பதைப் பொறுத்​திருந்​துதான் பார்க்க வேண்டும் என அரசியல்​ பார்​வை​யாளர்கள்​ தெரிவித்​தனர்.

SCROLL FOR NEXT