தமிழகம்

சிபிஐ விசாரணைக்குப் பின் பாஜகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? - திண்டுக்கல் சீனிவாசன் சந்தேகம்

செய்திப்பிரிவு

சிபிஐ விசாரணைக்கு சென்று திரும்பிய பின்னர் பாஜகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசும்போது, ‘‘சட்டப்பேரவை தேர்தலில் நமது அணி ஒரு பக்கம், திமுக தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம், அடுத்து பாஜக தலைமையில் மற்றும் பலர்’ என்று பேசினார். அதாவது பாஜக தலைமையில் அதிமுக செயல்படுவதாக பொருள்படும்படி பேசினார்.

          

இதுகுறித்து சென்னையில் நேற்று பேட்டியளித்த அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்த போது, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைவர் பழனிசாமி தான். இக்கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை கட்சி அதிமுக தான். இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என தெளிவாக தெரிவித்துவிட்டார். இதில் எந்த குழப்பமும் இல்லை.

அதிமுக, பாஜகவுக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக, அதிமுக ஊழல் கட்சி, பொது எதிரி பாஜக என பேசிவந்த விஜய், சிபிஐ விசாரணைக்கு சென்று திரும்பிய பிறகு, பாஜகவை ஒன்றும் சொல்லவில்லை. இதற்கு காரணத்தை விஜய் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT