தமிழகம்

நூலக முறைகேடு விவகாரத்தில் ஜெயரஞ்சன் வாய் திறக்காதது ஏன்? - பீட்டர் அல்போன்ஸ் கேள்வி

செய்திப்பிரிவு

திருச்சி: நூலக முறைகேடு விவகாரத்​தில் புத்​தக பரிந்​துரைக் குழு தலை​வ​ராக இருந்த ஜெயரஞ்​சன் வாய் திறக்​காதது ஏன்? என காங்​கிரஸ் மூத்த தலை​வர் பீட்​டர் அல்​போன்ஸ் கேள்வி எழுப்​பியுள்​ளார்.

மறைந்த பிரதமர் நேரு​வின் பிறந்த நாளை முன்​னிட்டு, திருச்சி சேவா சங்​கம் பள்ளி எதிரே உள்ள அவரது சிலைக்கு மாலை அணி​வித்து மரியாதை செலுத்​திய பின், அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: மேகேதாட்​டுவில் அணை கட்​டுவதை எந்த சக்​தி​யாலும் தடுக்க முடி​யாது என பிரதமர் மோடியை வைத்​துக்​கொண்டு கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகுமார் பேசி​யுள்​ளது கண்​டிக்​கத்​தக்​கது. இதை மேடை​யிலேயே பிரதமர் மோடி கண்​டித்து இருக்க வேண்​டும்.

தவறு செய்த தவெக எம்​எல்​ஏக்​கள் மீது முதல்​வர் நட​வடிக்கை எடுப்​பார். நூல​கங்​களில் 75 ஆயிரம் போலி நூல்​கள் இடம் பெற்​றது தொடர்​பாக, பரிந்​துரை குழு​வின் தலை​வ​ராக இருந்த ஜெயரஞ்​சன் ஏன் வாய் திறக்​க​வில்லை? இது​தொடர்​பாக அவர் பதிலளிக்க வேண்​டும். வரும் நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில் தொகுதி மறு​வரையறை வாக்​கெடுப்பு நடக்​கும் போது தமிழகத்​தில் நடந்து வரக்​கூடிய சதி​களின் முகத்​திரை கிழிக்​கப்​படும். இவ்​வாறு கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT