தமிழகம்

வேளச்சேரி தொகு​தி​யில் வெற்றிக்காக சுற்றி சுழலும் வேட்பாளர்கள்

சி.கண்ணன்

தென்​சென்​னை​யில் அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரும் தொகு​தி​யான வேளச்சேரி தொகு​தி​யில் திமுக கூட்டணி​யில் உள்ள காங்​கிரஸ், அதி​முக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்​றிக் கழகம் உள்​ளிட்ட கட்​சிகள் மற்​றும் சுயேச்​சைகள் என 27 வேட்​பாளர்​கள் போட்டியிடுகின்றனர்.

காங்​கிரஸ் - அசன் மவுலானா

இத்​தொகு​தி​யில் ஏற்​கெனவே எம்​எல்​ஏ​வாக உள்ள அசன் மவுலானா மீண்​டும் காங்​கிரஸ் சார்​பில் போட்டியிடுகிறார். திமுக அரசு செயல்​படுத்​திய திட்​டங்​களை எடுத்துக்​கூறி வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டுள்​ளார். இப்​போதுள்ள 50 ஆண்​டு​கால பழைய கழி​வுநீர் வடி​காலுக்கு பதிலாக, புதிய கழி​வுநீர் வடி​கால் அமைக்கப்படும் என்​பது உள்​ளிட்ட வாக்​குறு​தி​களை அளித்து வருகிறார்.

          

அதி​முக - எம்​.கே.அசோக்

அதி​முக வேட்​பாள​ராகப் போட்​டி​யிடும் எம்​.கே.அசோக், திமுக ஆட்​சி​யில் மழை நீர் வடி​கால் முழு​மை​யாக செயல்​படுத்​தப்​ப​டாத​தால், மழைக்​காலத்​தில் வேளச்​சேரி வெள்​ளச்​சேரி​யாகவே இன்​றும் உள்​ளது.

அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும், வெள்​ளச்​சேரி வேளச்​சேரி​யாக மாற்​றப்​படும். பட்டா வழங்​கப்​படும், தட்​டுப்​பாடு இல்​லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என்பன உள்​ளிட்ட வாக்​குறு​தி​களைக் கூறி வரு​கிறார்.

நாம் தமிழர் கட்சி - கீர்த்​தனா

நாதக வேட்​பாளர் கீர்த்​தனா வீடு​வீ​டாகச் சென்று தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கிறார். ‘திமுக​வின் சர்​வா​தி​கார ஆட்சி வேண்​டுமா அல்​லது நாம் தமிழர் கட்​சி​யின் மக்​கள் ஆட்சி வேண்​டுமா என்று சிந்​தி​யுங்​கள்.

உங்​களை நம்​பித்​தான் களத்​தில் நிற்​கிறோம். மக்​கள் விரும்​பும் நல்​லாட்​சியை உறு​தி​யாக கொடுப்​போம்’ என்று கூறி வாக்​குசேகரிப்​பில் ஈடு​படு​கிறார்.

தமிழக வெற்​றிக் கழகம் - ஆர்​.கு​மார்

தவெக வேட்​பாள​ரான ஆர்​.கு​மார், விஜய் முதல்​வ​ரானதும் பட்டா வழங்​கப்​படும். தட்​டுப்​பாடு இல்​லாமல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். அண்​ணன் சீர், தாய்​மாமன் சீர் உட்பட அனைத்து வாக்​குறு​தி​களை​யும் விஜய் நிறைவேற்​று​வார் என்று உறுதி அளித்து தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டுள்​ளார்.

ஐ.டி நிறு​வனங்​களில் பணி​யாற்​று​பவர்​கள் அதி​க​முள்ள வேளச்​சேரி தொகு​தி​யில் இந்த முறை வெற்றி யாருக்​கு? என்ற எதிர்​பார்ப்பு அதிகரித்து வருகிறது.

SCROLL FOR NEXT