தமிழகம்

யார் இந்த கிறிஸ்டோபர் திலக்? - சீனியர்களை பின்னுக்கு தள்ளி ராஜ்யசபாவுக்கு தேர்வான பின்னணி

இரா.வினோத்

​தி​முக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸூக்கு ஒதுக்​கப்​பட்ட ஒரு ராஜ்யசபா இடத்தை கைப்​பற்ற காங்​கிரஸின் பெரும் தலை​வர்​களும், முக்​கிய புள்​ளி​களும் முட்டி மோதிய நிலை​யில், புது​முக​மான கிறிஸ்​டோபர் திலக்கை டிக் அடித்​திருக்​கி​றார் ராகுல் காந்​தி.

கடந்த 2011ம் ஆண்டு சட்​டப்​பேர​வை​யில் திமுக​வுக்கு 23, காங்​கிரஸுக்கு 5 எம்​எல்​ஏக்​கள் இருந்​த‌னர். அப்​போது திமுக சார்​பில் கனி​மொழி​யும், திருச்சி சிவா​வும் ராஜ்யசபா எம்பி ஆவதற்கு காங்​கிரஸார் ஆதரவு அளித்​தனர்.

2016ல் காங்​கிரஸூக்கு 8 எம்​எல்​ஏக்​கள் இருந்த நிலை​யில், 2019 ராஜ்யசபா தேர்​தலிலும் திமுக சார்​பில் நிறுத்​தப்​பட்ட மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோவுக்கு காங்​கிரஸ் எம்​எல்​ஏ.க்​கள் வாக்​களித்​தனர். அதன்​பிறகு வந்த ராஜ்யசபா தேர்​தலில் மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசனுக்கு சீட் கொடுத்​த​தால், காங்​கிரஸூக்கு திமுக சீட் தரவில்​லை.

          

ஒவ்​வொரு முறை​யும் ராஜ்யசபா எம்.பி. பதவியை காங்​கிரஸ் கேட்​கும் போதெல்​லாம் திமுக மறுத்து வந்​தது. அதனால் இந்த முறை காங்​கிரஸ் மேலிடம் தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்​தைக்கு செல்​லும்​போதே ராஜ்யச​பாவை​யும் சேர்த்து பேச்சை தொடங்​கியது. அதி​கார பங்​கீடு அஸ்​திரத்தை முன்​வைத்து திமுக​வுக்கு நெருக்​கடி கொடுத்​து, ராஜ்யசபா சீட்டை விடாப்பிடி​யாக வாங்​கியது. இந்த ஒரு சீட்​டைக் கைப்​பற்ற தமிழக காங்​கிரஸின் மூத்த‌ தலை​வர்​களான‌ கே.எஸ்​.அழ​கிரி, தங்​க​பாலு, திரு​நாவு​கரசர், சுதர்ன நாச்​சி​யப்​பன், ஜெயகு​மார் உள்​ளிட்​டோர் நேரடி​யாகவே களமிறங்​கினர்.

இந்த ஒரு சீட்டு உறு​தி​யானதும் காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்கே மூலம் வேகவேக​மாக காய்​களை நகர்த்​தினர். ஆனால் காங்​கிரஸின் இளந்​தலை​வர் ராகுல் காந்​தி, சீனியர்​களுக்கு பதிலாக‌ அடுத்த தலை​முறை​யினருக்கு வாய்ப்பு வழங்க வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருந்​தார்.

அந்த நேரத்​தில் ராகுல் காந்​தி​யின் முக்​கிய ஆலோ​சக​ரான ஐஏஎஸ் அதி​காரி கே. ராஜூ, கிறிஸ்​டோபர் திலக்​கின் பெயரை ரேசில் சேர்த்​து​விட்​டார்.

மணிப்​பூர், நாகாலாந்து உள்​ளிட்ட வடகிழக்கு மாநிலங்​களின் மேலிட பொறுப்​பாள​ராக இருக்​கும் இவர், ராகுல் காந்​தி​யின் நம்​பிக்​கையை பெற்​றிருந்​தார். இதற்கு முன்​னர் ஆந்​திர தேர்​தலின்​போது மேலிடப் பொறுப்​பாள​ராக இருந்த போது ஜெகன் மோகன் ரெட்​டிக்கு எதி​ராக அவரது தங்கை ஷர்​மிளா ரெட்​டியை முன்​னிறுத்​தி, காங்​கிரஸூக்கு கை கொடுத்​தார். அதனால் ஆந்​தி​ராவை சேர்ந்த கே.​ராஜூ வின் நம்​பிக்​கையை பெற்​று, ராகுல் காந்​திக்​கும் நெருக்​க​மான​வ​ராக‌ மாறி​னார்.

கிறிஸ்​டோபர் திலக் தமி​ழ​கத்தை தாண்டி கேரளா,கர்​நாட​கா, ஆந்​தி​ரா, மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட மாநில தேர்​தல்​களி​லும் தீவிர‌ களப் பணி மேற்​கொண்​ட​தால் காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்​கே, கே.சி.வேணுகோ​பால் வரை எல்லா தலை​வர்​களுக்​கும் பரிச்​சய​மான​வர்.

கிறிஸ்​துவ பட்​டியலின வகுப்பை சேர்ந்த திலக் திருச்​சியை சேர்ந்​தவர். இவரை தேர்வு செய்​தால் தமி​ழ​கத்​தில் வசிக்​கும் கிறிஸ்​து​வர்​களின் கவன​மும், பட்​டியலினத்​தவரின் பார்​வை​யும் காங்​கிரஸின் பக்​கம் திரும்​பும் என ராகுல் கணக்​குப் போட்​டுள்​ளார். இதனால் ராஜ்யசபா சீட்​டுக்கு சீனியர்​களை கடந்து புது​முக​மான கிறிஸ்​டோபர் திலக்​கின் பெயரை டிக் அடித்​திருக்​கி​றார் ராகுல் காந்​தி.

யார் இந்த திலக்? - அண்மை கால​மாக டெல்​லியை மைய​மாக வைத்து வட இந்​திய மாநிலங்​களில் சுற்றி வரும் கிறிஸ்​டோபர் திலக் தமிழக காங்​கிரஸிலும் கள அளவில் பணி​யாற்​றிய​வர். இளங்​கலை பொறி​யியலும் முதுகலை மேலாண்மை படிப்​பும் படித்த இவர் தனி​யார் நிறு​வனத்​தில் பணி​யாற்​றி​னார். சுமார் 20 ஆண்​டு​களுக்கு முன்​ன‌ர் காங்​கிரஸில் இணைந்த இவர் அக்​கட்​சி​யின் இளைஞர் பிரி​வு, எஸ்​சி, எஸ்டி பிரிவு ஆகிய​வற்​றில் பணி​யாற்​றி​னார். பின்​னர் காங்​கிரஸின் செய​லா​ள​ராக உயர்ந்து பல மாநிலங்​களில் மேலிடப் பொறுப்​பாள​ராக இருந்​தார்.

SCROLL FOR NEXT