தமிழகம்

சென்னை கோட்டத்தில் 118 ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி வசதி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கோட்​டத்​தில் 118 ரயில் நிலை​யங்​களில் சக்கர நாற்​காலி வசதி செய்​யப்​பட்​டுள்​ள​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்​து, சென்னை கோட்ட ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் நடை​பெற்று வரும் மறுசீரமைப்​புப் பணி​களால், நடைமேடை எண் 11ஏ-​வைத் தவிர, பூந்​தமல்லி நெடுஞ்​சாலை பக்​கத்​திலிருந்து நடைமேடைகளுக்கு செல்​வதற்​கான சக்கர நாற்​காலி சேவை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

இதற்கு மாற்​றாக, காந்தி இர்​வின் சாலை பக்​கத்​திலிருந்து அனைத்து நடைமேடைகளுக்​கும் சக்கர நாற்​காலி மூலம் செல்​லும் வசதி செய்​யப்​பட்​டுள்​ளது. புதிய நடைமேம்​பாலம் பயன்​பாட்​டுக்கு வரும் வரை இந்த வசதி தற்​காலிக​மாக செயல்​பாட்​டில் இருக்​கும்.

சக்கர நாற்​காலி உதவி தேவைப்​படும் மூத்த குடிமக்​களின் வசதிக்​காக, சுமை தூக்​குபவர்​களின் சேவை மற்​றும் அவர்​களுக்​கான நிர்​ண​யிக்​கப்​பட்ட கட்டண விவரங்​கள் குறித்த தகவல்​களும் நிலைய வளாகத்​தில் பொருத்​த​மான இடங்​களில் காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. உதவி தேவைப்​படும் பயணி​கள் நிலைய மேலா​ளர், நிலைய அதி​காரியை அணுகி இந்த வசதி​யைப் பெறலாம்.

எழும்​பூர் ரயில் நிலை​யத்​தின் காந்தி இர்​வின் சாலை மற்​றும் பூந்​தமல்லி சாலை பக்​கங்​களை இணைக்​கும் பிரம்​மாண்​ட​மான 18 மீட்​டர் அகல நடைமேம்​பாலம் கட்​டும் பணி முன்​னுரிமை அடிப்​படை​யில் நடை​பெறுகிறது.

இந்த மேம்​பாலத்​தில் 6 நகரும் படிக்​கட்​டு​கள் மற்​றும் 5 மின்​தூக்​கி​கள் அமைக்​கப்​பட்​டு, அனைத்து நடைமேடைகளுக்​கும் செல்ல வழி​வகை செய்​யப்​படும். இப்​பணி நடப்​பாண்​டின் இறு​திக்​குள் முடிவடை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தாம்​பரம் ரயில் நிலை​யம் மற்​றும் நிலைய வளாகத்​தில் பல்​வேறு இடங்​களில் 13 சக்கர நாற்​காலிகள் வைக்​கப்​பட்​டுள்​ளன. சென்னை கோட்​டத்​தில் உள்ள 118 ரயில் நிலை​யங்​களில் உதவி தேவைப்​படும் பயணி​களுக்​காக சக்கர நாற்​காலி வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

சென்னை சென்ட்​ரல், கடற்​கரை, மாம்​பலம், பரங்​கிமலை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், அரக்​கோணம், திருத்​தணி, காட்​பாடி மற்​றும் ஜோலார்​பேட்டை உள்​ளிட்ட முக்​கிய நிலை​யங்​களில் பயணி​களின் தேவையைப் பூர்த்தி செய்ய பல சக்கர நாற்​காலிகள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT