தமிழகம்

“கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் முதல்வர் விஜய் பதில் என்ன?” - நயினார் நாகேந்திரன்

அ.அருள்தாசன்

நெல்லை: “கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “கள்ளக்குறிச்சி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், மாவட்ட ஆட்சியரான பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் தகவல் வந்துள்ளது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.

மேலும், பட்டாசு வெடிக்கக் கூடாது எனக் கூறிய காவல் துறை அதிகாரி கொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்களை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மக்களின் உரிமைகள் குறித்துப் பேசச் சென்றவர்களை துணை சபாநாயகர் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். அதன் பின்னர் அவரை மிரட்டி அப்படி எதுவும் நடைபெறவில்லை எனப் பேச வைத்துள்ளார்” என குற்றம்சாட்டினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT