தமிழகம்

SIR-க்குப் பின் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன?

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யில், கணக்​கெடுப்பு பணி நிறைவுற்று வரைவு வாக்​காளர் பட்​டியல்​கள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து வாக்​குச்​சாவடி மையங்​கள், சிறப்பு முகாம்​களி​லும் மக்​கள் பார்​வைக்​காக இந்தப் ​பட்​டியல் வைக்​கப்​படுகிறது.

www.elections.tn.gov.in என்ற இணை​யதளத்​தி​லும் வெளி​யிடப்​பட்டுள்ளது. இதில் மக்​கள் தங்​களது பெயர் மற்​றும் குடும்​பத்​தில் உள்ள வாக்​காளர்​களின் பெயர்​ விவரங்​களை சரி​பார்த்​துக் கொள்​ளலாம்.

இந்த பட்​டியலின் அடிப்​படை​யில், தகு​தி​யுள்ள வாக்​காளர்​களை புதி​தாக சேர்க்க அல்​லது தகு​தி​யற்ற வாக்​காளர்​களை நீக்க எந்த ஒரு வாக்​காள​ரும், அரசி​யல் கட்​சி​யும் தங்​கள் ஆட்​சேபனை​களை ஜனவரி 18-ம் தேதி வரை தாக்​கல் செய்​ய​லாம். இதை ஆய்வு செய்ய 234 வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள், 1,776 உதவி வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள் பணி​யில் உள்​ளனர்.

இந்தக் கால​கட்​டத்​தில், வரைவு வாக்​காளர் பட்​டியலில் இடம் பெறாதவர்​கள், வரும் ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்​காளர்​கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்​கலாம்.

வாக்​காளர் பட்​டியலில் நிரந்தர இடமாற்ற பதிவு​கள், உயி​ரிழந்​தோர் உள்​ளிட்ட ஆட்​சேபனை தொடர்​பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்​தும், தொகு​தி​களி​லேயே ஒரு இடத்​தில் இருந்து மற்​றொரு இடத்​துக்கு குடிபெயர்ந்து புதிய வசிப்​பிடத்​தில் உள்​ளவர்​களும், வேறு தொகு​திக்கு குடிபெயர்ந்​தவர்​களும் படிவம் 8-ஐ பூர்த்தி செய்​தும், அதற்​கான ஆவண ஆதார நகல்​களை இணைத்து சம்​பந்​தப்​பட்ட சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட, தொடர்​புடைய பகு​திக்​கான வாக்​காளர் பதிவு அலு​வலரிடம் சமர்ப்​பிக்​கலாம்.

அனைத்து வாக்​குச்​சாவடி மையங்​களில் சிறப்பு முகாம்​ நடை​பெறும்​போது உரிய படிவங்​களை பிஎல்​ஓ-க்​களிட​மும் சமர்ப்​பிக்​கலாம். www.elections.tn.gov.in என்ற இணை​யதளம் மூல​மாக​வும், பெயர் சேர்த்​தல், நீக்​கம், திருத்​தங்​கள் மேற்​கொள்​ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்​தல் ஆணை​யம் சார்​பில் வரும் ஜனவரி 18-ம் தேதி வரை பெறப்​படும் படிவங்​கள் பரிசீலிக்​கப்​பட்​டு, வரும்​ பிப்​ர​வரி மாதம்​ இறுதி ​வாக்​காளர்​ பட்​டியல்​ வெளியிடப்​பட உள்​ளது.

தமிழகத்​தில் கடந்த அக்​டோபர் 27 நில​வரப்​படி, 6 கோடியே 41 லட்​சத்து 14 ஆயிரத்து 584 வாக்​காளர்​களின் பெயர்​கள் இடம்​பெற்​றிருந்​தன. நடந்து முடிந்த எஸ்​ஐஆர் திருத்​தத்​தின்​படி, தமிழகத்​தில் 2,66,63,233 ஆண் வாக்​காளர்​கள், 2,77,06,332 பெண் வாக்​காளர்​கள், 7,191 இதர வாக்​காளர்​கள் என மொத்​தம் 5 கோடியே 43,76,756 வாக்​காளர்​களின் பெயர்​கள் வரைவு வாக்​காளர் பட்​டியலில் இடம் பெற்​றுள்​ளன.

உயிரிழந்த வாக்​காளர்​கள் 26,95,672 பேர், இடம்​பெயர்ந்​தோர் மற்​றும் குறிப்​பிட்ட முகவரி​யில் வசிக்​காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்​காளர்​கள் 3,98,278 பேர் என மொத்​தம் 97,37, 831 வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT