புதுடெல்லி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெற்றி பெறுவார் என்ற தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் முந்தைய கணிப்பு பலித்திருக்கிறது.
கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் தனியார் தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜய் தனித்துப் போட்டியிட்டால் அவர் அதிக இடங்களில் வெற்றி பெறுவதோடு மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழகத்தையும் அவர் வெல்வார். இது நிச்சயம்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து, இப்போதைய திமுக கூட்டணி நீடித்து, விஜய் தனித்துப் போட்டியிட வேண்டும். இந்த அரசியல் சூழலில் விஜய் அமோக வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். அவரது கணிப்பு அப்படியே பலித்திருக்கிறது.